Powered By Blogger

திங்கள், 24 மே, 2010

கொடுமை

ஒரு தமிழ்ப் போராளிக்கு நேர்ந்த கொடூரத்தின் பதிவு…

லகில் இந்த அளவு கொடுமையை, சர்வதேசங்களின் துரோகத்தை வேறு இனங்கள் அனுபவித்திருக்குமா?

இதற்கான பதில்.. ‘நிச்சயம் இருக்காது’ என்பதுதான்.

ஈழத் தமிழர்களை, அவர்களுக்காகப் போராடிய புலிப் படையினரை ஒழிக்க உலகின் வல்லரசுகள் திரண்டு நிற்க, அதை பிற தேசங்கள் கைகட்டி வேடிக்கைப் பார்த்தன.

அப்பாவித் தமிழர்கள் அடித்துக் கொல்லப்பட்டனர்.. சுட்டு வீழ்த்தப்பட்டனர். கையில் சிக்கிய போராளிகளுக்கோ நரகத்தை விடக் கொடிய சித்ரவதைகளை அரங்கேற்றிக் கொன்று குவித்துள்ளது வெறி பிடித்த சிங்கள ராணுவம்.

வட இலங்கை முழுவதும் தமிழர் பிணங்கள், இன்னும் கூட அழுகிய நிலையில் அல்லது எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை யுத்த செய்தியை ஏதோ கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி அவ்வப்போது கேட்டு மறந்துவிட்டு, கருணாநிதிக்கு நடக்கும் பாராட்டுவிழாவை கண்டு ரசிக்கும் ‘மரத்’ தமிழர்களை நன்கு தெரிந்து வைத்துள்ளன சர்வதேச நாடுகள். தமிழன் எப்போதும் ஒரு இனமாக, ஒருமித்த சக்தியாகத் திரண்டு எதிர் நிற்க மாட்டான் என்பதை கருணாநிதி, சோனியா, மன்மோகன் சிங்குகள், ராஜபக்சேக்கள் போலவே சர்வதேச நாடுகளும் புரிந்து வைத்துள்ளன. இந்தக் கொடுமைகள் கூட கொஞ்ச நாளைக்கு பேசப்பட்டு பின் மறக்கடிக்கப்பட்டுவிடுமோ என்னவோ!

இங்கே தரப்பட்டுள்ள படங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு போராளிக்கு நேர்ந்த கொடூரத்தின் பதிவுகள். இன்று காலை இந்தப் படங்களைப் பார்த்த போது, அவை குறித்து எழுதவும் திராணியற்றுப் போனோம்.

இவற்றுக்கெல்லாம் விடிவு என்ன..? மனித நேயம், மனித உரிமை பற்றியெல்லாம் பேசும் வல்லரசுகள் இப்போது வாய்மூடிக் கிடப்பதேன்?

தாயகத்தின் விடுதலைக்காகவும் தன்னினத்தின் உரிமைக்காவும் போராடிய ஒரு வீர மறவர் கூட்டத்தின் உறுப்பினர்கள் போர் முனையில் சிக்கிய போதெல்லாம் இந்தக் கொடுமைகள்தான் நிகழ்ந்துள்ளன. தமிழ் பெண் போராளிகளின் பிணங்களைக் கூட கற்பழித்து, உடலைத் துண்டு துண்டாக்கி சாலைகளில் சிதறவிட்ட கொடும் அரக்கர் கூட்டம்தான் சிங்கள ராணுவம். அதற்கான ஆதாரங்கள், வீடியோக்கள் கிடைக்கப் பெற்றும் கூட சர்வதேசம் வாய் மூடிக் கிடந்தது.

அடுத்து, போராளிகள் சிலரை நிர்வாணமாக்கி, கைகளைப் பின்புறம் கட்டி, பூட்ஸ் கால்களால் உதைத்து, தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொன்றனர் சிங்கள காடையர்கள். இந்த ஆதாரங்களைக் கையில் வைத்திருந்தும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன உலக நாடுகள்.

இதோ இப்போது மேலும் ஒரு கொடூரத்தின் சாட்சி, வீடியோவாய், புகைப்படங்களாய் விரிந்துள்ளது.

என்ன செய்யப் போகிறார்கள்… கொஞ்ச நாள் இதற்கும் கண்டனம் தெரிவித்துவிட்டு, அடுத்த கொடூரம் பற்றி பேசி பொழுதைக் கழிக்கப் போகிறார்களா?